நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களா?? இந்திய கிரிக்கெட் அணி அதிருப்தி!!

0

இந்தியா ஆஸ்திரேலியாக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி மைதானத்தில் வருகிற 7ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி இதுவரை போட்டிகள் நடந்து வந்தது.

கொரோனா சூழலிலும் போட்டிகள்:

இந்நிலையில் முதல் முதலாக 20,000 பார்வையாளர்களை அனுமதிக்க ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்கள் விளையாடி முடித்த பின்பு நட்சத்திர விடுதியில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது. இந்த செயல் அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணி சார்பாக கூறப்பட்டது என்னவெனில் ”கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஆஸ்திரேலியா அரசு சொல்லும் அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றி வருகிறோம். கிட்டதட்ட 60 நாளாக பயோபபூளில் தான் இருக்கிறோம்.மாஸ்க் அணிந்து கொண்டு அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி வருகிறோம். இந்நிலையில் சிட்னி மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதிக்கும் போது நாங்களும் மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை போல சகஜமாக இருக்கலாமே. எங்களை மட்டும் ஹோட்டலில் தங்க சொல்லி நிர்பந்திப்பது ஏன்? மைதானத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றால் அவர்கள் கூறுவது சரியாக இருக்கும்!!”

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

Brisbane Test in doubt as Indian team shows reluctance in accepting quarantine proposals: Report - cricket - Hindustan Times

“20000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் போது நாங்கள் மட்டும் ஹோட்டலில் அடைந்து கிடைக்க வேண்டுமா? நாங்கள் என்ன மிருககாட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள மிருகங்களா? என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது.

உலகின் 25வது மிகப்பெரிய பணக்காரர் ‘அலிபாபா’ நிறுவனர் ஜாக் மாவை காணவில்லை!!

கொரோனா விதிமுறைகளை சரியாக கையாண்டு வருகிறார்கள் இந்திய அணி வீரர்கள் எனவும், முகமத் சிராஜ் தன் தந்தை இறப்பிற்கு கூட செல்லவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் துணை கேப்டன் ரோஹித் சர்மா, நவ்தீப் சைனி, ரிஷப் பாண்ட் உள்பட ஐந்து வீரர்கள் ஹோட்டலுக்கு சென்றதாக வெளியான செய்தியில் அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என ரிப்போட் வந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here