இந்தியாவில் ஒரே நாளில் 3900 பேருக்கு கொரோனா உறுதி – 46 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

0
Corona Death
Corona Death

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் லாக்டவுன் 3.0 நேற்று (மே 4) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 46,433 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 195 பேர் உயிரிழந்து உள்ளதால் பலி எண்ணிக்கை 1568 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 12,727 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனவால் மகாராஷ்டிரா மாநிலம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 14,541 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 538 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 4898 பேருக்கும், தமிழகத்தில் 3550 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2942 பேருக்கும், ராஜஸ்தானில் 3061 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 2766 பேருக்கும் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here