இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா பேட்டிங்!!

0

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி கொரோனா தனிமைப்படுத்துதல், பயிற்சி என அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்த முடிவெடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டி:

கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக், உலகக்கோப்பை கிரிக்கெட் என பல முக்கிய விளையாட்டு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்தது. ஊரடங்கு காரணமாக வீட்டினுள்ளேயே அடைபட்டு இருந்த ரசிகர்களுக்கு இத்தொடர் அனைத்தையும் மறந்து ரசிக்க வைத்தது. அதன்பிறகு நேரடியாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு கிளம்பிய இந்திய அணி இன்று முதல் போட்டியில் விளையாட தொடங்கி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்போட்டியில் 1992ம் ஆண்டு இந்திய அணி பயன்படுத்திய ஜெர்சி மாடலில் உடை அணிந்து வீரர்கள் களமிறங்கி உள்ளனர். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. கொரோனா அச்சத்தால் மைதானத்தில் 50% ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுக பவுலர் ஆக சேர்க்கப்பட்டு உள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போதைய நிலவரப்படி 14 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் (33), ஆரோன் பின்ச் (34) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விளையாடும் 11 அணி:

இந்தியா – ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா

ஆஸ்திரேலியா – ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (wk), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here