வீட்டில் தீபம் ஏற்றும் முறை & ஆன்மிக விளக்கம் – கார்த்திகை ஸ்பெஷல்!!

0

கார்த்திகை மாதம் என்றாலே கடவுளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப தரிசனம், சஷ்டி விரதத்தை அடுத்து கார்த்திகை தீபம் கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை திருநாளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றிவைத்து பூஜை செய்வதால் நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவதாக கருதப்படுகிறது.

கார்த்திகை தீபம்:

தமிழில் எட்டாவது மாதமாக வரும் கார்த்திகை மாதம், நமது மூத்த கடவுளான சிவனுக்கும், நம்ம காக்கும் தெய்வமான விஷ்ணுவுக்கும் உரிய மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களால் ஆன நெருப்புக்குரிய தலமாக திருவண்ணாமலை காணப்படுகிறது. 3000 – டன் எடையுள்ள விளக்கு கார்த்திகை திருநாளன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கார்த்திகை தீபம் எப்பொழுது கொண்டாப்படுகிறது என்றால் கார்த்திகை மாதம் வரக்கூடிய கிருத்திகை திருநாளன்று கணிக்கப்படுகிறது. வீடுகள் முழுவதும் சுத்தம் செய்து மாலை நேரத்தில் ஒற்றை எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். கார்த்திகை திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. மொத்தம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். நெய்வேத்தியம் செய்வதற்கு நெல் பொரி அல்லது அவள் பொரியை வெல்லபாகில் கலந்து சிவனுக்கு படைத்தால் சிவன் அருள் முழுமையாக கிடைக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தீபம் ஏற்றும்பொழுது கிழக்குமுகம் பார்த்து தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் தீரும். வடக்கு திசையை நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடை நீங்கும். மேற்கு திசையை நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும். தெற்கு திசையை நோக்கி தீபம் ஏற்றவோ, சாப்பிடவோ கூடாது. ஒவ்வொரு முகம் கொண்ட தீபத்திற்கும் ஒரு ஒரு நன்மைகள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒரு முகம் கொண்ட தீபம் – நினைத்த காரியம் நடக்கும்.

இருமுகம் கொண்ட தீபம் – குடும்பம் சிறந்து விளங்கும்.

மூன்று முகம் கொண்ட தீபம் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.

நான்கு முகம் கொண்ட தீபம் – வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்.

ஐந்து முகம் கொண்ட தீபம் – அனைத்து வகையான நன்மைகளும் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here