#INDvsAUS 3 வது டெஸ்ட் போட்டி – நடராஜன் மிஸ்ஸிங்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியில் நடராஜன் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்தியா அணியில் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டது. இதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் வைத்து துவங்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா அணியில் கேப்டன் விராட் கோஹ்லி இல்லாத நிலையில் ரஹானே இந்தியா அணியை வழிநடத்துகிறார். இந்த டெஸ்ட் போட்டியின் போது இந்தியா அணி வீரர்கள் பலர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி வருகிறார்கள். இது இந்தியா அணிக்கு பின்னடைவாக அமைகிறது. மேலும் தற்போது இதனை அணியில் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியின் போது இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர் ஷமி காயம் காரணமாக அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அணியில் இடம்பெறாத நடராஜன்:

அவருக்கு பதில் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளை அசத்திய நடராஜன் களமிறக்கப்படுவர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அறிமுக வீரராக சிராஜ் களமிறக்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு இரண்டாவது போட்டியின் பொது உமேஷ் யாதேவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் போட்டியின் நடுவே அவர் பெவிலியன் திரும்பினார். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்த போட்டியியல் நடராஜனை தேர்வு செய்ய ரசிகர்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை பரிசீலித்து வந்தனர்.

தளபதி 65ல் நடிக்கப்போகும் கதாநாயகி – இணையத்தில் கசிந்த தகவல்!!

From Chinnappampatti to Canberra, Natarajan's yorkers take flight - DTNext.in

 

மேலும் சில தினங்களுக்கு முன்பு நடராஜன் வெள்ள நிற ஜெர்சியில் ஓர் புகை படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் 3 வது டெஸ்ட் போட்டியில் நடராஜன் பங்கேற்பார் என்று அனைவரும் உறுதிசெய்தனர். தற்போது அனைவரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நாளை நடக்கவிருக்கும் போட்டியில் விளையாடப்போகும் இந்தியா அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இவருக்கு பதில் சைனி இடம்பிடித்துள்ளார். இது அனைவரையும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

3 வது டெஸ்ட் போட்டிக்கான இந்தியா அணி விவரம்:

ரஹானே(C), ரோகித், கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், சைனி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here