#INDvsAUS 2வது டெஸ்ட்: ஷமிக்கு பதில் சிராஜ் – நடராஜனை நிராகரித்த அணி நிர்வாகம்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி பவுலரான முகமது ஷமி காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதில் சிராஜ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடராஜனை அணியில் எடுக்காதது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்:

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. தற்போது 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதில் களமிறங்க உள்ள 11 வீரர்கள் விபரங்களை இந்திய அணி அறிவித்துள்ளது. இதில் முன்னணி பந்துவீச்சாளர் ஷமிக்கு பதில் சிராஜ் அணியில் இடம் பெற்றுள்ளார். அந்த இடத்தில் நடராஜனை எடுக்காதது அனைவர்க்கும் அதிர்ச்சியாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷமி பந்து வேகமாக வந்து அவரது மணிக்கட்டில் பட்டதால் அவரது கை எலும்பு முறிந்து விட்டது. இதனால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது இவருக்கு பதில் நடராஜனை தேர்வு செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

ஏனெனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்ட போது 30 நிமிடத்தில் விராட் கோஹ்லி, ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் நேற்று நடந்த பயிற்சியின் போது வெறும் 15 நிமிடத்தில் புஜாரா மற்றும் ரஹானே விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – முக ஸ்டாலின் நலம் விசாரிப்பு!!

ஆனால் இவரை தேர்வு செய்யாததற்கு காரணம் முதல் தர போட்டிகளில் சிராஜ் நல்ல ரெகார்ட் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி ரஞ்சி மற்றும் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி போட்டிகளிலும் நன்றாக செயல்பட்டுள்ளார். மேலும் புள்ளிகள் அடிப்படையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here