2021ல் வரப்போகும் 3 புதிய அம்சங்கள் – வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு!!

0

2021 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது செயலியில் புதிய 3 அம்சங்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இது பயனாளர்கள் அனைவர்க்கும் மிகவும் தேவைப்படும் அப்டேட் என்றும் கூறப்படுகிறது.

வாட்ஸ் ஆப்:

வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனாளர்கள் தேவைக்கேற்ப ஒவ்வரு ஆண்டும் புதிய அப்டேட்களை செய்து வருகிறது. முதலில் இந்த செயலி தகவலை பரிமாறுவதற்காக தயாரிக்கப்பட்டு தற்போது ஆடியோ, வீடியோ கால் மற்றும் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு அப்டேட் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போவதால் மீண்டும் தேவைக்கேற்ப 3 புதிய அம்சங்களை 2021ல் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

1. கணினியிலும் ஆடியோ & வீடியோ கால்:

வாட்ஸ் ஆப் வெப் மூலம் கணினியில் வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்துவோர் தற்போது ஆடியோ மற்றும் வீடியோ கால் பேச இயலும். இந்த ஆப்ஷனை சில பயனாளர்களுக்கு மட்டும் வழங்கி அவர்களின் கருத்தை கேட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டில் இந்த ஆப்ஷன் அனைவர்க்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை :

வாட்ஸ் ஆப் நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகளை புதுப்பிக்கவுள்ளது. நாம் அதற்கு ஒப்புதல் அளிக்க தவறினால் நம்மால் வாட்ஸ் ஆப் செயலியை உபயோகப்படுத்த முடியாது. நாம் நம் அக்கவுண்டை நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.

3. Multiple-item ஷேர் செய்யும் வசதி:

மேலும் WABetaInfo அறிக்கையின் படி, பயனாளர்கள் தங்களுக்கு தேவையான புகைப்படங்கள் அனைத்தையும் காப்பி அல்லது ஷேர் செய்து தமக்கு தேவையான சேட்களில் அதனை பேஸ்ட் செய்யும் ஆப்ஷன் அடுத்த ஆண்டு வரும் என்றும் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here