2018 நீட் தேர்விலும் ஆள்மாறாட்ட முறைகேடு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!

0

தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு ஏற்கனவே 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தற்போது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு தொடர்பாக ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வு..!

தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட செய்தி அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்தது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் அவர்களுக்கு உதவிய 10 வடமாநில மாணவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட சிபிசிஐடி போலீசார் அவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

2018 யிலும் முறைகேடு..!

இந்நிலையில் 2018ம் ஆண்டு நடந்த நீட் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். எனவே இது குறித்து 2500 மாணவர்களின் ஆவணங்களை மறுஆய்வு செய்து சரிபார்க்குமாறு மருத்துவ கல்வி இயக்குனருக்கு சிபிசிஐடி போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு உதவிய 2 பேரை தேடும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here