அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
red alert
red alert

ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வடக்கு வங்கக்கடலில் புதிய தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை அல்லது மிககனமழை இருக்கும் எனவும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொண்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெலங்கானா,ஆந்திரா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு

red alert
red alert

தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பல மாநிலங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. மும்பையில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மும்பை, தானே, பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் ஆகஸ்ட் 4, 5ஆம் தேதிகளில் கொங்கன், கோவா, மும்பையில் தீவிர, அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

red alert
red alert

இதே போல மத்திய மகாராஷ்டிரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொண்ட கோவை, தேனி மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

ரெட் அலர்ட்

red alert
red alert

ரெட் அலர்ட் எச்சரிக்கை கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக் கூடும் என்பதால் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மிகவும் இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க கடலோர பகுதிகள், அந்தமான் நிக்காபோர் கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here