அடக்கடவுளே.., போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை வரலட்சுமி.., நேரில் ஆஜராக சொன்ன என்.ஐ.ஏ!!

0
அடக்கடவுளே.., போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை வரலட்சுமி.., நேரில் ஆஜராக சொன்ன என்.ஐ.ஏ!!
அடக்கடவுளே.., போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை வரலட்சுமி.., நேரில் ஆஜராக சொன்ன என்.ஐ.ஏ!!

போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகைகள் சிக்குவது சினிமாவில் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் கிட்டத்தட்ட 300 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றத்திற்காக ஆதிலிங்கம் என்பவரை காவல்துறை கைது செய்தது. அவரை விசாரித்த போது போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் ஆதிலிங்கம் முதலீடு செய்து வந்ததும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மேலும் இது தொடர்பாக ஆதாரங்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராகும்படி என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது அவர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருவதால் அவர் இப்போதைக்கு ஆஜராக முடியாது என்று நடிகை வரலட்சுமி கூறியதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் காலை உணவுக்காக கையேந்த விட்ட தி.மு.க. அரசே., கொதித்தெழும் சீமான்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here