பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான இளவரசி – உறவினர்கள் உற்சாக வரவேற்பு!!

0

சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற சசிகலாவின் உறவினர் இளவரசி 4 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலை ஆகியுள்ளார். தற்போது அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இளவரசி:

சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சசிகலாவுடன் சிறை சென்றார் இளவரசி. இவர்கள் தண்டனைக்காக பெங்களூரு அக்ரஹா பகுதி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களுக்கு 4 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கடந்த 27ம் தேதி அன்று சசிகலா சிறை தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை பெற்றார். தற்போது அவர் பெங்களூரு இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இவருடன் சிறைக்கு சென்ற இளவரசி இன்று விடுதலை செய்யப்படுவர் என்று அறிவித்திருந்தனர் போலீசார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் சிறையில் இருக்கும் பொழுது இளவரசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் இவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்பு இவரது உடல் நலமானதால் இவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலையுடன் கணவர் கவுதம் – ரசிகர்கள் பிரம்மிப்பு!!

அபராத தொகையை செலுத்திய நிலையில் இளவரசி இன்று விடுதலை செய்யப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு பின்பு இளவரசி இன்று விடுதலை ஆகியுள்ளார். விடுதலை ஆன இளவரசிக்கு அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். மேலும் வரும் 8ம் தேதி அன்று இளவரசி சசிகலாவுடன் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here