‘உரிமைக்காக போராடுவதும், ஆதரிப்பதும் தான் ஜனநாயகம்’ – விவசாயிகளுக்காக வெற்றிமாறன் பதிவு!!

0

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளை ஆதரித்து உலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். பிரபல தமிழ் படங்களின் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தனது முதல் கருத்தை பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 70 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டத்திற்கு எந்தப்பலனும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று அவர்கள் மேற்கொண்ட பேரணி உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறியது. இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக தலைவர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்க பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கு இந்திய பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரது படங்கள் அனைத்திலும் ஏதாவதொரு சமூக நீதிகளை குறிப்பிடும் கருத்துக்கள் இருக்கும். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் முதன் முதலாக விவசாயிகளுக்கு ஆதரவாக தனது கருத்தை சமூகவலைதளமான முகநூலில் பதிவுசெய்துள்ளார்.

அரசு பணி ஊழியர்களுக்கு ஒய்வு வயதை 60 ஆக உயர்த்த முடிவு – தமிழக அரசு திட்டம்!!

அந்த பதிவில், ”நீதிக்கான தங்களது குரல் கேட்கப்படாமல் போகும் போது அது போராட்டமாக மாறுகிறது. அரசாங்கத்தின் ஆளுமை என்பது மக்களால் கொடுக்கப்பட்டது. அது மக்களுக்காக செயல்படவேண்டும். கார்ப்பரேடுக்காக அல்ல. நாட்டினுடைய சக்தியை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர். உரிமைக்காக போராடுவதும் அதை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம்” என கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here