பக்கத்துல ஆள் வந்தா அலாரம் அடிக்கும் – ஐ.ஐ.டி மாணவர்களின் சமூக இடைவெளி கருவி..!

0
social distancing
social distancing

நாடெங்கிலும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் சமூக விலகல் மட்டுமே தற்போதைய தீர்வு. அந்த சமூக விலகலை கண்டறியும் கருவி ஒன்றை ஐ.ஐ.டி-காரக்பூர் கண்டறிந்துள்ளது.

சமூக விலகல்

பேராசிரியர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி மற்றும் பேராசிரியர் ஆதித்யா பந்தோபாத்யாய் போன்றவர்கள் தலைமையில் இந்த குழு சமூக விலகலை கண்டறியும் கருவியை வடிவமைத்துள்ளது. மேலும் இதன் விலை மலிவானதே என ஐ.ஐ.டி-காரக்பூரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு – நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா..!

ஐ.ஐ.டி-காரக்பூர்
ஐ.ஐ.டி-காரக்பூர்

“சமூக விலகல் விதிமுறைகளை மீறும் போதெல்லாம் இந்த சாதனம் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். சுகாதார மற்றும் குடும்ப னால அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலின் படி ஏற்கனவே இந்த சாதனத்தின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது.” இவ்வாறு ஆராய்ச்சி குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

அலாரம்

பொது பொதுக் கூட்டங்கள், சந்தைகள், மால்கள் போன்ற இடங்களில், மக்கள் பெருமளவுக்கு கூடுகிறார்கள். அப்போது இந்த கருவியை ஒரு இடத்தில் பொருத்தி வைத்துவிட்டால் போதும், மக்கள் நெருங்கும்போது சைரன் ஒலியை எழுப்பும். டிஸ்டன்ஸ் ப்ளீஸ் என அது கூறுகிறது. நெருப்பு பரவும்போது, எப்படி அலுவலகங்களில் உள்ள சைரன் எழுமோ அதுபோலத்தான் இதுவும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

social distancing
social distancing

இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக, சமூக இடைவெளியை மக்கள் பராமரிக்கிறார்களா இல்லையா என்பது கணக்கிடப்படுகிறது. இதுபோன்ற சாதனத்தை இன்னும் தொலைதூர இடங்களில் நிறுவி, பயன்படுத்துவதற்கும், மலிவான விலையில், ஹார்ட்வேர் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் செலவைக் குறைப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர்கள் கூறினர். லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் போது மாணவர்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஹார்ட்வேர்களை கொண்டு இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here