சூப்பரான ‘சேமியா பாயசம்’ ரெசிபி – புரட்டாசி ஸ்பெஷல்!!

0
semiya-payasam-recipe
semiya-payasam-recipe

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். பெருமாளை வழிபட சாம்பார், அப்பளம், வடை போன்றவற்றை செய்து படையல் வைப்போம். அதில் பாயசம் முக்கியமான ஒன்று. ஏனெனில் இனிப்பு பதார்தத்தையும் சேர்த்து கடவுளுக்கு வைக்க வேண்டும். இப்பொழுது இந்த பாயசத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

semiya-payasam-recipe
ingredients

சேமியா – 1 கப்

பால் – 2 லிட்டர்

நெய் – 4 தேக்கரண்டி

ஏலக்காய் – 3

முந்திரி – 20 கிராம்

கிஸ்மிஸ் பழம் – 20 கிராம்

பாதாம் – 20 கிராம்

ஜவ்வரிசி – 1/4 கப்

சர்க்கரை – 1/2 கப்

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன்பிறகு சேமியாவை அந்த நெய்யில் போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

semiya payasam
semiya payasam

அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி அதன் பிறகு 1 கப் தண்ணீரை சேர்த்து அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது வறுத்து வைத்திருந்த சேமியாவை அதில் சேர்த்துக் கொள்ளவும்.

semiya payasam
semiya payasam

தண்ணீர் வற்றி வரும்போது அதில் மீதி 1 கப் சர்க்கரையை அதில் சேர்த்து கிளற வேண்டும். அதன்பின் 1 லிட்டர் பாலை அதில் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஏலக்காயை தட்டி அதில் சேர்த்து நாம் வறுத்து வைத்திருந்த முந்திரி பாதம், கிஸ்மிஸ் பழத்தை அதில் சேர்த்து இறக்கி பரிமாறினால் சுவை அள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here