சுவையான ‘பாவ் பாஜி’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
Pav-Bhaji
Pav-Bhaji

இப்பொழுது உள்ள சூழ்நிலையில் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனால் பலரும் கடைபிடிப்பதில்லை. மேலும் குழந்தைகளும் விதவிதமாக செய்து கொடுத்தால் மட்டுமே விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ரோட்டு கடைகளில் விற்கப்படும் பாவ் பாஜி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

முட்டை – 3

வெங்காயம் – 2

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

தக்காளி – 1

வெண்ணெய்

பிரட் அல்லது பன்

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது முட்டையை ஸ்லைஸ் ஆக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

paav bhaji
paav bhaji

இப்பொழுது ஒரு பன் அல்லது பிரடை எடுத்து அதன் மேல் வெண்ணெய் தடவி தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்துக்கொள்ளவும். இப்பொழுது நாம் செய்து வைத்த கிரேவியை ஒரு கரண்டி எடுத்து அதில் வைத்து அதன் மேல் முட்டையை வைத்து மூடி திருப்பி போடவும். இப்பொழுது வெண்ணெயை சேர்க்கவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான பாவ் பாஜி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here