விசேஷ வீட்டு சுவையில் “தாளித்து வதக்கிய முள்ளங்கி சாம்பார்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

நம் வீட்டின் அனைத்து விசேஷங்கள் மற்றும் நல்ல காரியங்கள் என்றாலே சமையலில் சாம்பார் இன்றியமையாதது ஆகும். பல காய்கள் மற்றும் பருப்பு வகைகளை வைத்து சாம்பார் வைப்பதால் அதுபோன்று நம் குடும்பத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். பல வகையான சாம்பார் வகைகள் உள்ளன. இதில் முள்ளங்கியை வைத்து விசேஷ வீட்டு சுவையில் எப்படி சாம்பார் செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 250 கி

துவரம்பருப்பு – 50 கி

கடலைப்பருப்பு – 50 கி

பெ. வெங்காயம் – 1

சி. வெங்காயம் – 4

முள்ளங்கி – 2

மிளகாய் – 5

தக்காளி – 5

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 4 பல்

மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டீ ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

சீரகம் – ஒரு ஸ்பூன்

கடுகு – தாளிக்க

காய்ந்த மிளகாய் – 2

மல்லி, கறிவேப்பிலை

உப்பு, எண்ணெய்

செய்முறை:

ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருப்பு, பெரிய வெங்காயம், மிளகாய், தக்காளி, இஞ்சி, சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக குலையும் வரை விசில்விட்டு வேகவைக்க வேண்டும். தனியாக முள்ளங்கி தோலை சீவி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வாணலியில் நல்லலெண்ணையை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இடித்த பூண்டு சேர்த்து தாளித்து சிவந்த பின் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கி வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முள்ளங்கி மற்றும் மசாலா அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வதங்கியவுடன் சூடாக இருக்கும்போதே வேகவைத்த பருப்புடன் சேர்த்து கொட்டி குக்கரை திறந்த நிலையில் இரண்டு நிமிடம் கொதிக்கவிட வேண்டும். இவ்வாறு, செய்து சாப்பிட்டால் முள்ளங்கி சாம்பார் மிக சுவையாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரம் ஒருமுறை சாப்பிட்டால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here