ஜில்லுனு ஒரு சாக்லேட் மில்க் ஷேக் – எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க!!

0
chocolate milkshake
chocolate milkshake

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். எவ்வளவு கொடுத்தாலும் குடித்துக்கொண்டு தான் இருப்பார். இப்பொழுது மில்க் ஷேக் மற்றும் ஐஸ் கிரீம் எளிய முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையா பொருட்கள்

  • பால் 1/2 லி
  • டைரி மில்க் ரூ 50 பாக்கெட்
  • சாக்லேட் பிஸ்கட் 2 பாக்கெட்
  • ஐஸ் கட்டி
  • சர்க்கரை 2 தேக்கரண்டி

செய்முறை

chocolate milkshake
chocolate milkshake

முதலில் ஐஸ் கிரீம் செய்ய பாலை காய்ச்சி அதில் டைரி மில்க் சேர்த்து நன்கு கலந்து காய்ச்சி கொள்ளவும். பிஸ்கடை மிக்ஸியில் போட்டு அடித்து அதன்பின் காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் ஊற்றி சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை ஒரு பாக்ஸில் ஊற்றி காற்று புகாதவாறு நன்கு மூடிக்கொள்ளவும். இதனை 3 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். பின்பு எடுத்தால் ஐஸ் கிரீம் தயார்.

chocolate milkshake
chocolate milkshake

இப்பொழுது நாம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்றால், குளிர்ந்த பால் 1/2 லிட்டர் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் 3 தேக்கரண்டிசர்க்கரையை சேர்த்து பிறகு ஐஸ் கட்டிகளையும், நாம் செய்து வைத்த ஐஸ் கிரீம்களையும் சிறிது சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். இப்பொழுது மில்க் ஷேக் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here