மணக்க மணக்க கிராமத்து ஸ்டைலில் ‘நாட்டுக்கோழி குழம்பு’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
chicken curry

இன்னைக்கு எத்தனையோ ரெஸிபி வந்தாலும் மறக்க முடியாத நம்ம நாட்டுக்கோழி குழம்பு பத்தி தாங்க பாக்க போறோம். சண்டே என்ன ஸ்பெஷல்னு கேட்டா நாட்டு கோழி  குழம்புன்னு சொல்லி பாருங்க அடுத்த நிமிசமே சாப்பிட வரட்டுமான்னு  கேக்காம இருக்க மாட்டாங்க. ஏன்னா அப்டி இருக்குங்க நம்ம கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு. வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்

punjabi chicken ingredients

நாட்டுக்கோழி கறி  – 1 kg

நல்லஎண்ணெய் – 150 ml

சின்ன வெங்காயம் – 1/4 kg

பூண்டு – 4

காய்ந்த மிளகாய்  –  10

மிளகு – 25 kg

சீரகம் – 10 kg

மல்லி  – 10 kg

மஞ்சள் தூள் – தேவையான அளவு

மல்லித்தழை – கைப்பிடி அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – தேவையான அளவு

அரைக்க தேவையான பொருள்

மிளகு,சீரகம்,மல்லி,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம்,பூண்டு மற்றும் மல்லித்தழை தாளித்து வீட்டு மசால் சேர்த்து அரைக்கவும்.

செய்முறை

குக்கரில் நல்லஎண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் நாட்டுக்கோழி கறியை சேர்க்க வேண்டும். நிறம் மாறிய பின் தேவையான அளவு உப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை  சேர்க்கவும். பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.

chicken curry

கறியுடன் மசாலா சேர்ந்ததும் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை விடவும். பின்பு பரிமாறுவதற்கு முன் நல்லஎண்ணெய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.வீட்டில் உள்ள அனைவரும் உங்கள்  சமையலுக்கு அடிமையாகி விடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here