அடுத்த ஆண்டு 2021 இல் 23 நாட்கள் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

0

தமிழகத்தில் 2021ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 23 நாட்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு அரசு பணியாளருக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.

தமிழக அரசு
அடுத்த ஆண்டிற்கான (2021), அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அனைத்து தமிழக அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். ஆங்கில புத்தாண்டு துவங்கி கிறிஸ்துமஸ் பண்டிகை வரை மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பொங்கல், தீபாவளி பண்டிகைகள் வியாழக்கிழமை வருகின்றன. 6 விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன. மற்ற விடுமுறை, வேலை நாட்களில் வருவதால் தனியார் பணியாளர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here