அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: சென்னை பல்கலை., அறிவிப்பு

0

அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த 1.2 லட்சம் மாணவர்களின் முடிவுகளை சென்னை பல்கலை., அறிவித்துள்ளது. அனைவரும் குறைந்த பட்ச தேர்ச்சி பெற்று உள்ளனர்.

சென்னை பல்கலைகழகம் 

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைவரையும் தேர்ச்சியாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, சென்னை பல்கலையின் ஆட்சி மன்ற கூட்டம் நடந்தது, இதில், கடந்த ஏப்ரலில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைவருக்கும் குறைந்த பட்ச மதிப்பெண் (தேர்ச்சி ) வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவை சென்னை பல்கலை வெளியிட்டுள்ளது. இதில் விண்ணப்பித்த 1.2 லட்சம் மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் வழங்கி உள்ளது. இந்த முடிவு செயல் வடிவம் பெற்றால், இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 150 கல்லூரிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் பயன்பெறலாம். கூடுதல் மதிப்பெண் பெற விரும்புவோர், அடுத்து அறிவிக்கப்படும் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here