குளிர்காலத்திலும் சருமத்தை மிருதுவாக வைத்திருப்பது எப்படி?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0

வருடத்தின் மற்ற மாதங்களை விட குளிர்காலங்களில் நமது சருமத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. காரணம் குளிர்காலங்களில் நமது தோலானது வழக்கத்தை விட அதிகமாக வறண்டு விடுகிறது. தோலானது வறண்டு ஈரப்பதம் இல்லாமல் இருப்பது அதற்க்கு தேவையான சத்துக்கள் கிடைக்கவில்லை என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.

சருமம் மிருதுவாக, ஆரோக்கியத்துடன் பொலிவாக இருப்பதற்கு சில கொழுப்பு அமிலங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதால் சருமம் மேலும் பாதிப்படைகின்றது. இதற்கான எளிய தீர்வாக நமது சருமத்தை வீட்டிலேயே எப்படி எளிமையா பராமரிப்பது என்று இந்த பதிவில் காண்போம். உலர்ந்த சருமத்தை சரியாக்குவதற்கு சில பேஷ்பேக்குகள் உள்ளது, முதலில் அவையென்ன என்பதை பார்ப்போம்.

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் நமது சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் மிருதுவாகவும், அழகாகவும், இளமையாகவும் இருப்பதற்கு உதவுகிறது. இது சிறந்த மாய்சரைசர் ஆக பயன்படுகிறது. ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணையுடன் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து சருமத்தில் தடவ வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணையை முகத்தில் தடவி வருவதன் மூலம் சருமத்தில் பருக்கள் இன்றி மிகவும் மிருதுவாக காட்சியளிக்கும். பப்பாளியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து முகத்தில் பேக் போட்டுமசாஜ் செய்து கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகம் மென்மையாக,பொலிவுடன் இருக்கும்.

அவோகேடோ மாஸ்க்:

அவோகேடோ பழத்துடன் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து மாஸ்க் போட்டுக் கொள்ள வேண்டும். அவோகேடோ பழத்தில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இதனால் சருமம் மிருதுவாகவும், இளமை தோற்றத்துடனும் காணப்படும்.

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!

அவோகேடோ பழத்தை வேகா வைத்து அதனுடன் பப்பாளி பழம் மற்றும் சிறிது தேன் சேர்த்து மாஸ்க் போட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாகும்.

ஓட்ஸ் மாஸ்க்:

1 ஸ்பூன் ஓட்ஸ் உடன் தேன் மற்றும் தண்ணீர் கலந்து இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போட வேண்டும். அரைமணி நேரம் கழித்து மாஸ்க்கை நீக்கி தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். ஓட்ஸ் நமது சருமம் இழந்த ஈரப்பதத்தை மீண்டும் கொண்டு வருகிறது.

வாழைப்பழ மாஸ்க்:

சிறிதளவு வாழைப்பழத்தை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து அப்படியே மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் களைத்து கழுவி வந்தால் மிகவும் வறண்ட சருமம் கூட மிருதுவாகி விடும்.

முட்டை:

2 முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து மாஸ்க் போட பயன்படுத்தலாம். இவை இரண்டும் முகத்தை மிருதுவாக்கி இளமையான சருமத்தை தருகிறது.

மேலே சொன்ன குறிப்புகள் மட்டும் இல்லாமல் நாம் எப்போதும் அதிக தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் சருமமும் ஆரோக்கியமாக, மிருதுவாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here