சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – அனைத்து துறைகளையும் மூட ஆணை!!

0
Chennai IIT
Chennai IIT

ஆசியாவில் சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் இடம் பெற்றுள்ள சென்னையில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கழகத்தில் விடுதியில் தங்கி பயிலும் 66 மாணவர்கள் மற்றும் 5 ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு எதிரொலி:

சென்னையில் செயல்பட்டு வரும் ஐஐடி நிறுவனத்தில் 9 மாணவர் விடுதிகளும் 1 விருந்தினர் மாளிகையும் உள்ளது. அதில் 774 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், தற்போது டிசம்பர் 1-ம் தேதி அறிவிப்பின் படி மாணவர்கள் 66 பேருக்கும் நிறுவன ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்ட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் விடுதி மெஸ் மூலமாக பரவிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 9ஆம் தேதி வளாகத்தில் நான்கு மாணவர்களுக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் மெஸ் பணியாளர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கவே மெஸ் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காண்டேக்ட் ட்ரேசிங் செய்ததில் 11ஆம் தேதி 11 பேருக்கும், 12ஆம் தேதி 12 பேருக்கும், 13ஆம் தேதி 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 774 மாணவர்களில் 408 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 33 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது.

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!!

இதனால் ஐஐடி வளாகத்தில் ஆய்வகங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதி அறைகள் அல்லது வீடுகளில் இருந்தோ பணி செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 பேரும் கிங் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here