ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மத்திய ரயில்வே வெளியீடு!!

1

ரயில்வே அதிகாரியாக வேண்டும் என எண்ணி மோசடிகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என மத்திய ரயில்வே துறை எச்சரித்துள்ளது. வேலை வாங்கித்தருக்கிறேன், எனக்கு ரயில்வே துறையில் அவர்களை தெரியும் இவர்களை தெரியும் என கூறி பணம் கேட்கும் மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

ரயில்வே துறை எச்சரிக்கை

அரசாங்க அதிகாரி ஆகவேண்டும் என்பது அனைவரின் கனவு என்றே கூறலாம். ஆனால் அந்த அரசாங்க வேலை அனைவருக்கும் அவர்கள் ஆசைபட்டது போல் கிடைப்பதில்லை. அந்த வேலைக்காக பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அவை பலன் அளிப்பது என்னவோ ஒரு சிலருக்கு தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிலர் லஞ்சம் கொடுத்து வேலை பார்க்கிறார்கள், சிலர் சிபாரிசு மூலம் வேலை பார்க்கிறார்கள், சிலர் முறையாக தேர்வு எழுதி வேலை பார்க்கிறார்கள். ஊழல் செய்து வேலை பார்ப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவு போட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வே துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிலர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகவும், போலியான வேலை நியமன கடிதங்களை காட்டியும், பலரை ஏமாற்றுவதாக புகார்கள் வந்துள்ளன. ரயில்வே வேலைவாய்ப்பகம், மண்டல ரயில்வே அலுவலகங்களில், தங்களுக்கு அறிமுகம் இருப்பதாகவும், வேலை வாங்கி தருவதாகவும், அப்பாவிகளை மோசடி நபர்கள் ஏமாற்றுகின்றனர்.

டெல்லியில் 19வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!!

ரயில்வே வேலை வாய்ப்புகளில் ஒருபோதும், முகவர்களையோ, பயிற்சி மையங்களையோ வைத்து பணியாட்களை நியமனம் செய்வதில்லை. ரயில்வே துறையின் அதிகாரபூர்வ இணையதளங்கள் ஆர்.ஆர்.பி., – ஆர்.ஆர்.சி.,மற்றும், ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ எனும் தேசிய நாளிதழ்களில் மட்டுமே வெளியாகும் விளம்பரங்கள் அதிகாரபூர்வமானவை ஆகும் அவற்றை பயன்படுத்தி மட்டுமே பணியாட்கள் நியமிக்கப்படுகிறார்கள். வேலை தேடுவோர், ரயில்வே இணையதள முகவரிகளை, மிகத் துல்லியமாக சரி பார்பது அவசியம். மோசடி இணையதளங்கள் உள்ளன, யாரும் ஏமாறாதீர்” இவ்வாறு, ரயில்வே எச்சரித்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here