சரும அழகை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
face mask
face mask

முகத்தை அழகாக்குவதில் நாம் பயன்படுத்தும் அழகு சாதனங்களுக்கு மட்டும் அதிக பங்கு கிடையாது. அதையும் தாண்டி நாம் முகத்தை பராமரிக்கும் விதத்தை பொறுத்து உள்ளது. முகத்திற்கு எவ்வளவு கிரீம்கள் நாம் பயன்படுத்தினாலும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விஷயங்களும் உள்ளன. அந்த வகையில் நமது உடல் சருமங்களை எப்படி பராமரிப்பது என பார்க்கலாம்.

சரும பராமரிப்பு

நம் சருமங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பொறுத்து தான் இருக்கும். சிலர் உணவுகளை சரிவர எடுத்துக்கொள்வதில்லை. அதாவது சாப்பிடாமல் இருப்பது, மற்றும் நேரம் தவறி சாப்பிடுவது, காலையில் அதிக நேரம் தூங்குவது போன்றவை நமது உடலில் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

dry skin
dry skin

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போனால் சருமத்தை தான் பாதிக்கும். எனவே தான் உணவு பழக்கங்களை முறையாக பின்பற்ற வேண்டும். அடிக்கடி கடைகளில் சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்களை உணவில் சேர்த்து கொள்வது போன்றவை நமது சருமத்தை நேரடியாக பாதிக்கும். முடிந்த வரை உணவில் எண்ணெயை குறைத்து, வீட்டு சாப்பாட்டை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.

tamilnadu foods
tamilnadu foods

இரவு உறக்கம் மிக முக்கியமான ஒன்று. எனவே குறைந்தது 8 மணி நேரமாவது கண்டிப்பாக உறங்க வேண்டும். அப்போது தான் உடலும், மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். அப்படி இருக்கும்போது தான் நமது சருமமும் அழகாகும்.

sleeping
sleeping

அடிக்கடி சுத்தமான நீரில் முகத்தை கழுவி வர வேண்டும். அப்பொழுது தான் முகத்தில் அழுக்கு படிவது தடுக்கப்படும். மேலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் வரை குடித்து பழகுங்கள். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்து மிக முக்கியமான ஒன்று. நீர் சத்துக்கள் உடலில் குறையும் போது சரும வறட்சி ஏற்படுகிறது.

drinking-water
drinking-water

நாம் வெளியில் செல்லும்போது மேக்கப் செய்து கொள்கிறோம். அப்பொழுது முகத்தில் படியும் வியர்வை முகத்தில் உள்ள கிரீம்களோடு கலந்து முகத்தின் உள்ளே படிந்து தேவை இல்லாத அலர்ஜியை ஏற்படுத்துகிறது. மேலும் இரவில் தூங்கும்போது மேக்கப் சுத்தமாக கலைத்து விட்டு தான் தூங்க வேண்டும்.

sweating
sweating

வெளியில் செல்லும்போது வெயில் நேரடியாக முகத்தில் படுவதால் சருமம் வறண்டு போகிறது. இதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் கிரீம் பயன்படுத்த வேண்டும். டாக்டர் ஆலோசனை பெற்று கூட பயன்படுத்தலாம்.

sun light
sun light

முடிந்த வரை கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு இயற்கை பொருட்கள் மூலம் முகத்தை அழகாக்கலாம். அதாவது தக்காளி, வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றை பயன்படுத்தி முகப்பொலிவை அதிகரிக்கலாம். இந்த முறைகளை நாம் பின்பற்றும்போது கண்டிப்பாக சருமத்தின் அழகு மேம்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here