இனி நீங்க லிப்ஸ்டிக் போட தேவையே இல்ல – சிவப்பான லிப்ஸ்க்கு டிப்ஸ் இதோ!!

0
pink lips
pink lips

பொதுவாக பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களின் உதடு தான். அந்த உதடுகளை சரிவர பராமரிக்காததால் கருமையாக மாறுகிறது. உதடு கருமைக்கு முக்கிய காரணமே உதட்டில் படிந்துள்ள இறந்த செல்களே. உதடு கருமையை போக்க சில வழிமுறைகள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.

டிப்ஸ்

உதடுகளுக்கு நாம் சில கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதாலும் உதடுகள் கருமையாக வாய்ப்புகள் உள்ளன. நாம் உதடுகளை கடிப்பதால் கருமை ஏற்படுகின்றன. சிலருக்கு மாத்திரைகளை உட்கொள்ளுவதாலும் கருமை ஏற்படுகிறது. ஆனாலும் சரியான பராமரிப்பின்மையால் தான் உதடு கருமை பெரும்பாலும் ஏற்படுகிறது. இதனை தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Lip-scrub
Lip-scrub

கொத்தமல்லியை சாறு எடுத்து அந்த சாற்றை உதட்டில் தடவி வந்தால் கருமை நீங்கும். சிலருக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்துவதாலும் உதடு கருமை ஏற்படலாம். பிறகு தேங்காய் எண்ணையில் சர்க்கரையை கலந்து உதட்டில் தடவ வேண்டும். 2 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

brushing
brushing

நாம் காலையில் பல் துலக்கும் போது உதட்டிலும் பிரஷ் வைத்து தேய்க்க வேண்டும். இதனால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் மறையும். தக்காளி, கேரட் போன்ற சாற்றை உதட்டில் தேய்க்கலாம். பீட்ரூட் தோலை உதட்டில் தடவினாலும் நல்ல பலனை தரும். தேன், பீட்ரூட் சாறு, எலுமிச்சை சாறு கலந்து உதட்டில் தேய்த்து வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உதடு கருமை முழுவதுமாக நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here