கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ‘வாட்ஸ்அப்’ ஸ்டிக்கர்ஸ் – எப்படி டவுன்லோட் செய்வது??

0

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது. அது தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது விஷயங்களை அவ்வப்போது செய்து வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸ்அப், அனிமேட்டட் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஸ்டிக்கர்களை எப்படி டவுன்லோட் செய்து உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் வாட்ஸ்அப் சாட் பாக்ஸில் உள்ள எமோஜி ஐகான்ஐ கிளிக் செய்து, கீழே உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷனை திறக்கவும். அதன் மூலம் உங்களால் வலது பக்கம் உள்ள வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பகுதிக்கு செல்ல முடியும்.

அடுத்ததாக ஸ்டிக்கர் விண்டோவின் டாப் ரைட் கார்னரில் உள்ள + (பிளஸ் ) ஐ கிளிக் செய்யவும். இப்போது அனைத்து ஸ்டிக்கர்களையும் காட்டும், புது விண்டோ ஒன்று ஓபன் ஆகும். இதில் ஏற்கனவே உள்ள ஸ்டிக்கர்களுடன், மெர்ரி மற்றும் பிரைட் என்ற பெயரில் புதிய கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்ளும் இருக்கும். முழு ஸ்டிக்கர் பேக்கும் வேண்டுமென்றால் அதற்க்கு அடுத்துள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.

பேக்கில் இருக்கும் அனைத்து ஸ்டிக்கர்களையும் காண ஸ்டிக்கர் பெயரை கிளிக் செய்யவும். ஒருவேளை உங்களுக்கு மொத்த ஸ்டிக்கர்களும் தேவைப்படவில்லை என்றால், நீங்கள் விரும்பும் ஸ்டிக்கரை மட்டும் நீண்ட நேரம் அழுத்திய பிறகு தோன்றும் பாப்அப் க்கு பிறகு எந்த ஸ்டிக்கரை சேர்க்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி வரும். அதற்க்கு சேர் என்று கிளிக் செய்து, ஸ்டிக்கரை பிடித்த நபர்களுக்கு அனுப்பி வாழ்த்து சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here