திருநள்ளாற்றுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – அறநிலையத்துறை உத்தரவு!!

0

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும், 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா நெகடிவ் என்று வந்தால்தான் அனுமதி வழங்கப்படும் எனவும் அறநிலையத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாறு

காரைக்காலில் அமைந்துள்ள தர்ப்பராண்யேஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதியன்று, சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்றைய நாளில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த விழாவில்கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக அக்கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்க தலைவர், அமூர்த்தீஸ்வர நாதன் என்பவர், கொரோனா அச்சம் அதிகமாகியுள்ள நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பும் பின்பும் ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது எனவும், அதன் பிறகு அடுத்த 48 நாட்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் மேலான இறுதி விசாரணை கடந்த 23ம் தேதி நடைபெற்றது.

தற்போது” திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும், 48 மணிக்கு நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டு நெகடிவ் என்று வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்றும் அறநிலைய துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here