விஜயை சீண்டிய சீமான் – கொந்தளித்த ரசிகர்கள்!! வைரலாகும் போஸ்டர்!!

0

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து கூறியுள்ள சீமானை எதிர்த்து விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டிவருகின்றனர். இன்று தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர் அனைவரது கவனத்தையும் கவர்வதாக உள்ளது.

சீமான்

விஜய் அரசியலில் நுழைவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது , “சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமல் ஆகியோருக்கு கொடுக்கும் அடியில் இனி எந்த ஒரு நடிகனும் அரசியலுக்கு வருவதற்கு யோசிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, அவருக்கெதிராக விஜயின் ரசிகர்கள் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி சீமானுக்கெதிரான, தமது எதிர்பினை பதிவு செய்து வருகின்றனர். தனது கருத்துக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டுமென்பதை தொடர்ந்து கூறி வரும் சீமான், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசித்ததை கடுமையாக விமரிசித்து வந்தார் . விஜய்யின் அரசியல் வருகை குறித்து சில மாதங்களுக்கு முன் என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்ப்பேன் என்று கூறியிருந்த நிலையில், அவர் தற்போது இப்படி கூறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகம் முழுவதும் சீமானை எதிர்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தன. அவற்றுள் தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ‘ அரசியலை நடிகர் சீமான்” எனும் தலைப்பில், அவர் அரசியல் ஆதாயத்திற்காக நடிப்பதாக கூறி ஒட்டப்பட்டுள்ள்ள அந்த போஸ்டரில் சீமானை ஒருமையில் பேசி கண்டித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here