சிட்னி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘யார்கர்’ நடராஜன் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0
CANBERRA, AUSTRALIA - DECEMBER 02: Thangarasu Natarajan of India celebrates dismissing Marnus Labuschagne of Australia during game three of the One Day International series between Australia and India at Manuka Oval on December 02, 2020 in Canberra, Australia. (Photo by Cameron Spencer - CA/Cricket Australia via Getty Images)

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இந்திய அணியின் பவுலர் நடராஜன் தற்போது சிட்னியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார். மேலும் அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது அபாரமான யார்கர் பவுலிங்கால் அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களையும் மிரட்டினார். இதனால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பல சேர்ந்தனர். அதன் பின்பு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்த வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகினார். அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு தமிழக வீரர் நடராஜனுக்கு கிடைத்தது. அதன் பின் அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு சென்று அவர் தனது வாழ்க்கையின் முதல் சர்வதேச போட்டியை துவக்கினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் மிகவும் சிறப்பாக பந்து வீசி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திணறடித்தார். ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்களை சாய்த்தார். அதன் பின் நடந்த 3 டி 20 போட்டிகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வெல்வதற்கு தக்க உறுதுணையாக திகழ்ந்தார். இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டி 20 தொடருக்கான கோப்பையையும் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தனது தொடர் நாயகன் விருதையும் நடராஜனுக்கு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

சிட்னி:

தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் அணியில் இவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் வலை பயிற்சி மேற்கொள்ளும் பேட்ஸ்மேன்களுக்கு தனது பவுலிங் மூலம் பயிற்சி அளித்து வருகிறார். மேலும் அவ்வப்போது அவர் ஆஸ்திரேலியாவை சுற்றி பார்த்தும் வருகிறார். சில தினங்களுக்கு முன் அவர் ஆஸ்திரேலியாவில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் !!

இது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. தற்போது அதேபோல் சிட்னியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இவரும் சிட்னியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார். மேலும் அங்குள்ள தேவாலயம் முன்பு மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன், நடராஜன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here