2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – பிசிசிஐ ஒப்புதல்!!

0

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்ப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர்:

இந்தியாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து களத்தில் இறங்குவர். மேலும் இந்த போட்டியின் மூலம் இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச அணியில் இடம் பெறுவதற்கு பெரும் உதவியாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கொரோனா காலங்களிலும் இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தது பிசிசிஐ. இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் போட்டியின் முடிவில் பிசிசிஐ தலைவர் கங்குலி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கப் போவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

தற்போது அகமதாபாத்தில் இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிசிசிஐ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் 2 முக்கிய விஷயங்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலாவதாக ஐபிஎல் போட்டிகளில் தற்போது மொத்தம் 8 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் மேலும் 2 அணிகளை உரிமையாக்குவதற்காக அதானி குழுமம் மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்) குழுமத்தினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

வலை பயிற்சியில் மீண்டும் ரஹானே & புஜாராவை காலி செய்த நடராஜன்!!

மேலும் அந்த 2 அணிகளின் பெயர்களும் அஹமதாபாத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். மேலும் 2 அணிகளை சேர்ப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் அது 2022 ஆம் ஆண்டு தான் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏனென்றால் 10 அணிகள் விளையாடினால் 94 போட்டிகள் சராசரியாக 2 அரை மாதங்களாக தொடர் நடைபெறும். அதுவரை வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்க முடியாது. எனவே இதை எல்லாம் சிந்தித்து அதற்கான நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சமீபத்தில் ஐசிசி 2028க்கான ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. இதற்கு பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக் விளையாட்டில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here