சைவ பிரியர்களுக்கு ஒரு அசத்தலான டிஷ் – ‘சைவ மீன் குழம்பு’!!

0
veg fish curry

சைவ உணவு பிரியர்களை விட அசைவ உணவு பிரியர்களே பெரும்பாலும் அதிகம். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள கொழுப்பு சத்துக்கள் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்த கூடும். எனவே சைவ உணவுகளையே அசைவ ஸ்டைலில் சமைத்து கொடுத்தால் மிச்சமே வைக்காமல் சாப்பிட்டு விடுவர். அந்த வகையில் தற்போது சுவையான சைவ மீன் குழம்பு எப்படி செய்றதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு – 100 கி

தட்டாம்பயிறு – 100 கி

சின்ன வெங்காயம் – 100 கி

தக்காளி – 2

புளி – 50 கி

பெரிய வெங்காயம் – 2

இஞ்சிபூண்டு விழுது – 2 தேக்கரண்டி

தேங்காய் துருவியது – அரை மூடி

மல்லித்தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் பாசிப்பருப்பையும், தட்டாம்பயிரையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேங்காய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து மை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

veg fish curry
veg fish curry

இப்பொழுது அரைத்து எடுத்த இந்த கலவையை ஒரு மூங்கில் குச்சியை எடுத்து அதனை சுற்றி வைக்கவும். பிறகு அதனை வாழையிலையில் உருட்டி இட்லி வேக வைப்பது போல நீராவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

fish curry
fish curry

நன்கு வெந்ததும் வாழையிலையை பிரித்து நடுவில் உள்ள கட்டையை எடுத்துவிட்டு வட்டமாக வெட்டவும். இப்பொழுது மீன் துண்டுகள் வடிவத்தில் இருக்கும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

fish curry
fish curry

நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும்.அதன்பிறகு வறுத்து அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி விழுதை அதில் சேர்க்கவும். அடிபிடிக்காமல் கிளறவும்.

fish kolambu
fish kolambu

பின்பு அதில் புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிவந்ததும் நாம் செய்து வைத்துள்ள சைவ மீனை அதில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சைவ மீன் குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here