மாஸ்டர் திரைப்படம் OTT இல் ரிலீசா?? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!!

0

கொரோனா ஊரடங்கு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் பல முக்கிய ஹீரோக்களின் படங்களும் நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5 போன்ற OTT தளங்களில் வெளியாகி வருகின்றனர். இந்த வரிசையில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் அமேசானில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மாஸ்டர் ரிலீஸ்:

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முக்கிய துறைகளில் சினிமாவும் ஒன்று. இதனால் பல படப்பிடிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கி இருந்தாலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் விளைவாக பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருக்கும் டாப் ஹீரோக்களின் படங்களும் OTT இல் ரிலீஸ் ஆக தொடங்கிவிட்டன. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, விஜய் சேதுபதியின் ‘க.பெ.ரணசிங்கம்’ போன்ற படங்களும் விரைவில் இணையத்தில் வெளியாக உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். திரையரங்கத்தை நம்பி இருக்கும் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விரைந்து திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பல டாப் நட்சத்திரங்கள் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படமும் விரைவில் OTT இல் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் பரவியது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ, விசில், பட்டாசு என கொண்டாட்டங்களை OTT ஒருபோதும் தராது என்பதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

கில்லி மற்றும் தூள் படத்தில் நடித்த ரூபன் கொரோனாவால் உயிரிழப்பு – திரையுலகினர் இரங்கல்!!

இந்நிலையில் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு உள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாஸ்டர் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என கூறியுள்ளார். திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் விரைந்து தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுடன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here