‘முந்திரி சிக்கன்'( Kaju Chicken) – சண்டேல செஞ்சு அசத்துங்க..!

0
kaju chicken recipes
kaju chicken recipes

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், தயிர் , பால், எலுமிச்சை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, முந்திரி, மிளகு, சீரகம் – 1/2 டீஸ்பூன் சோம்பு, டீஸ்பூன் கசகசா, டீஸ்பூன் பட்டை, கிராம்பு, புதினா

செய்முறை

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும். பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here