லடாக் எல்லை உட்பட 5 பிரச்சனைகள் – இந்திய, ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு..!

0
india china ladakh problem
india china ladakh problem

இந்தியா, சீனா இடையே தற்போது எல்லை பிரச்சனை கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க பேச்சு வார்த்தை நடைபெற்றது, தற்போது அந்த பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது.

லடாக் எல்லை பிரச்சனை

மால்டோ பகுதியில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் பங்கேற்றார். லடாக்கின் எல்லை பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீன ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் 150 வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பிரச்சினை தொடங்கிய இடமான பாங்காங் டிசோ ஏரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை சீனா மீண்டும் கட்டமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதைப் போல இந்தியாவும் எல்லைப் பகுதி யில் ராணுவத்தைக் குவித்துள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக் கிடையே பதற்றத்தை அதிகரித் துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளி டையே ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டனர். இதில் தீர்வு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளின் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டி னன்ட் ஜெனரல்கள் பாங்காங் டிசோ பகுதியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தியாவில் இருந்து லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், சீனாவில் இருந்து மேஜர் ஜெனரல் லி லின் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்திய தரப்பில் மேலும், 6 அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பேச்சு வார்த்தை

இதற்கு முன் இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையே, முக்கிய பேச்சுவார்த்தை நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த பேச்சு வார்த்தையின்போது, கிழக்கு ஆசியாவுக்கான இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலர், நவீன் ஸ்ரீவத்சவா பங்கேற்றார். சீனா தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக தலைமை இயக்குனரான, வூ ஜியாங் ஹோ பங்கேற்றனர்.

தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று உறுதி..!

india china ladakh problem
india china ladakh problem

இன்று நடந்த பேச்சுவார்த்தையின்போது, மொத்தம் 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு நடத்தப்பட்டதாக தெரிகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள சீனப் பகுதிக்குட்பட்ட மோல்டா என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்றைய பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here