அம்பன், நிசார்காவை தொடர்ந்து ‘கதி’ புயல் – தமிழகத்தை தாக்குமா..?

0
Cyclone
Cyclone

நிசார்கா மற்றும் ஆம்பன் புயலை தொடர்ந்து அடுத்ததாக இந்தியாவை தாக்க கதி என்ற புயல் தாக்க வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கதி புயல்:

தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நாளை தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இது வேகமெடுத்து புதிய புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் மையம் தெரிவித்து உள்ளது. வேகம் என்ற பொருள் கொண்ட இந்தக் பெயர் இந்தியாவால் வைக்க பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

காற்று அழுத்தத்தால் பாதிப்பு பெறும் மாநிலங்கள்:

மேற்கு வங்கத்திற்கு கீழ் கதி புயல் உருவாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகரும்.ஒடிசா வழியாக நாக்பூர், இந்தூர் வரை இந்த புயல் செல்ல வாய்ப்புள்ளது. அல்லது ஒடிசா அருகிலேயே இந்த புயல் வலிமை இழந்து கரையை கடக்கும். இதனால் ஒடிசாவிற்கு இன்னொரு புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பும் உள்ளதாக அறிவிக்க பட்டு உள்ளது. புயலின் வேகம் குறித்து எந்த தகவல்களும் வெளியாக வில்லை. இந்த புயல் மூலம் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here