குஜராத் ஸ்டைல் ‘டோக்லா’ – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

0
dhokla-recipe-
dhokla-recipe-

தேவையான பொருட்கள்

Khaman-besan-mix
Khaman-besan-mix

ஒரு கப் கடலை மாவு, 3 டேபிள் ஸ்பூன் ரவை, 1/2 டிஸ்பூன் இஞ்சி விழுது 2 பிச்சைமிளகாய், 1/4 டிஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவுபெருங்காய தூள், 1/2 டிஸ்பூன் உப்பு, 1 டிஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1/2 டிஸ்பூன்பேக்கிங் சோடா, 1.25 கப் தண்ணீர், தாளிக்க தேவையானவை
2 டிஸ்பூன்எண்ணெய், 1/2 டிஸ்பூன் கடுகு, 1/ டிஸ்பூன் சீரகம் 1 டிஸ்பூன் வெள்ளை எள்ளு 1 பச்சை மிளகாய், இரண்டாக கீறியது சிறிதளவுபெருங்காய தூள், 1 கப் துருவிய தேங்காய்சிறிதளவுகொத்தமல்லி இலை

செய்முறை

முதலில் கடலை மாவையும் ரவையையும் ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும். அத்துடன் சிறிதளவு இஞ்சி விழுது பச்சைமிளகாய், பெருங்காயத்தூள்,மஞ்சள் தூள்,எலுமிச்சைசாறு, உப்பு, பேக்கிங் சோடா, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். அந்த மாவை நிமிடம் ஊற விடவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சம அளவில் ஊற்றி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும். இப்பொழுது கெட்டி பதத்திற்கு வந்திருக்கும்.

dhokla-recipe
dhokla-recipe

இப்பொழுது அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். பின்பு அதை சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.தாளித்தவற்றை வெட்டி வைத்துள்ள டோக்லா துண்டுகள் மீது சேர்க்கவும். இப்பொழுது சுவையான டோக்லா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here