மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் ‘சிக்கன் பக்கோடா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
chicken pakkoda
chicken pakkoda

சிக்கன் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு ஆகும். சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் குழம்பு என பல வகையான ரெசிபியை பார்த்துள்ளோம். இப்பொழுது சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியான சிக்கன் பக்கோடா எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்:

chicken ingredients
chicken ingredients

சிக்கன் – 1/2 கி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகுதூள் – 1 தேக்கரண்டி

கடலைமாவு – 2 தேக்கரண்டி

அரிசி மாவு – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை

இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் – 2

புதினா

கொத்தமல்லி

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதன்பின் ஒரு சிறிய பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

Chicken-Pakoda
Chicken-Pakoda

மாவு பதத்திற்கு கெட்டி சேராமல் கலக்கவும். இப்பொழுது ஊற வைத்துள்ள சிக்கனை இந்த மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்பொழுது சூடான சுவையான சிக்கன் பக்கோடா தயார். இதற்கு சைடு டிஷ் புதினா சட்னி அருமையாக இருக்கும்.

chicken-pakora
chicken-pakora

இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா போன்றவற்றை நன்கு அரைத்து எடுத்தால் புதினா சட்னி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here