Wednesday, April 24, 2024

ஊரடங்கில் பிஎப் பணத்தை அதிகமாக பயன்படுத்திய மக்கள் – தமிழகம் மூன்றாமிடம்!!

Must Read

நாடு முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா பொது முடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வருங்கால வைப்பு தொகையான பிஎப் பணத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவல்:

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பொது முடக்கம் அமல்படுத்தபட்டது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நெருக்கடியை சமாளிக்க மக்கள் தாங்கள் வைத்திருந்த வருங்கால வைப்பு நிதியான பிஎப் பணத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Why you must not consider tax refund as free money

இந்த தொகையில் இருந்து ஒரு முறை 75 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதில் கொரோனா சிகிச்சைக்காக உடனடியாக பணத்தை பெற்றுக் கொள்ளலாம். திருமணம், வீடு கட்டுதல் போன்ற நிகழ்வுகளுக்கு 15 நாட்களுக்கு பின் பணம் கிடைக்கிறது.

அதிகமாக பணம் எடுத்த மாநிலத்தவர்:

இதனை பயன்படுத்தி பொது மக்கள் தங்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர். தற்போது எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக பணத்தை எடுத்துள்ளனர் என்றும் எந்த மாநில மக்கள் எவ்வளவு பணத்தை எடுத்துள்ளனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் மகாராஷ்டிரா மக்கள் அதிகமாக 7,838 கோடி ரூபாய் எடுத்து முதலிடத்தில் உள்ளனர், கர்நாடக மக்கள் 4,985 ரூபாய் பணம் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளனர், தமிழக மக்கள் 4,985 கோடி ரூபாய் பணம் எடுத்து மூன்றாமிடத்தில் உள்ளனர். இந்த பிஎப் பணம் மூலமாக மக்கள் தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர் என்று தெரிகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -