40 வயசுலயும் இளமையா, அழகா ஜொலிக்கணுமா?? – அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

0
mathuri dixit
mathuri dixit

அனைவர்க்கும் 40 வயதை கடந்தால் தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்றவற்றை ஏற்படுகிறது. சிலருக்கு 35 வயதிலேயே கூட ஏற்படுகிறது. இது வராமல் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.

40 வயதிலும் இளமை தோற்றம்:

பெண்களுக்கு எப்பொழுதும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் 40 வயதை கடக்கும்போது ஏராளமான மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகிறது. ஆனால் நமது உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது மூலமாக நமது உடலை இளமையாகவே வைத்துக்கொள்ளலாம். மாதவிடாய் காரணமாக பெண்கள் உடல்சோர்வு, பதற்றம், கவலை, எதிலும் கவனம் செலுத்த இயலாமை போன்றவை ஏற்படுவது இயற்கையே. ஆனால் இதனை சரியான உணவு பழக்கங்கள் மற்றும் சில உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்.

health foods
health foods

தினமும் நாம் காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ போன்றவற்றை அருந்துவது கூடாது. வெறும் வயிற்றில் குடிப்பதால் அல்சர் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் சாதம் வடித்த நீரை அல்லது தண்ணீர் குடித்துவிட்டு குடிக்க வேண்டும். நமது உடலில் 40 வயதை தாண்டும்போது ஊட்டச்சத்து மிக முக்கியமானதாகும். எனவே முழுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து முழு தானியங்களான கோதுமை, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். இதனை உணவில் சேர்த்தால் நார்சத்துகள் அதிகம் கிடைக்கும். நார்ச்சத்துக்கள் சருமத்திற்கு மிக நல்லது. மேலும் சூரியனிடம் இருந்து வரும் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.

Calcium-Foods
Calcium-Foods

40 வயதை அடைந்ததும் சில பொருட்களை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது வெள்ளை பொருட்களான சீனி, உப்பு போன்றவை. உப்பு சேர்த்து கொள்வதை தவிர்ப்பதால் ரத்த அழுத்தம் குறையும். பொரித்த உணவுகள், துரித உணவுகள், சீஸ் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சருமம் சுருக்கமடையாமல் இருக்க பழங்கள் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை அழகாக்குவதில் அதிக பங்கு வகுக்கிறது. இதனால் சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மீன்களை சாப்பிடலாம். அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். உடற்பயிற்சி மேற்கொள்வதால் மனஅழுத்தம், உடல்சோர்வு போன்றவை தடுக்கப்படுகிறது.

fitness
fitness

40 வயதை கடந்த பின்னும் வலுவான எலும்புகள் மற்றும் தசைகளை பெற புரதச்சத்து மிக முக்கியமாகும். அதனால் குறைந்த கொழுப்புகள் உள்ள இறைச்சி, முட்டை, பால், பீன்ஸ் மற்றும் பயிறு போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவ்வாறு நம் உணவு பழக்கங்களை பின்பற்றி வந்தால் 40 வயதிலும் இளமையாக ஜொலிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here