அரியர் மாணவர்கள் தேர்ச்சி முடிவில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!!

0
Minister Jeya Kumar
Minister Jeya Kumar

தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

அரியர் தேர்ச்சி:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தேர்வுகள் நடத்த இயலாத காரணத்தால் இறுதிப்பருவ தேர்வுகள் தவிர்த்து பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்த மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கல்வியாளர்கள் பலர் இதனை எதிர்த்தாலும் மாணவர்கள் மதிப்பில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இன்ஜினியரிங் அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் AICTE, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதம் வெளியானது. அதில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. ஊடகங்களில் இவ்வாறு வைரலான கடிதத்தை நான் வெளியிடவில்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். மேலும் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Minister Jeyakumar
Minister Jeyakumar

தேசிய கல்வியறிவு விகித தரவரிசை பட்டியல் – கேரளா மீண்டும் முதலிடம்!!

இதனால் அரியர் தேர்வுகள் ரத்தா? இல்லையா? என தெளிவான முடிவு தெரியாமல் மாணவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்த முடிவில் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசாணை வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here