Friday, April 19, 2024

எல்லை துப்பாக்கிச் சூட்டிற்கு நாங்கள் காரணம் இல்லை – இந்திய ராணுவம் மறுப்பு!!

Must Read

நேற்று இரவு ஷென்பவோ மலையோரத்தில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடத்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் இந்திய வீரர்கள் தான் என்று சீன அரசு குற்றம்சாட்டியுள்ளதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

எல்லைப்பிரச்னை:

கடந்த மே மாதத்தில் இருந்து லடாக் எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது.  இந்த விவகாரம் ஜூன் மாதம் பெரிய மோதலாக இரு நாட்டு வீரர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இதனால் நமது நாட்டை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்தில் 45 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு உருவாகியது. இதனை சரி செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

india china border issue
india china border issue

கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் மீண்டும் சீன ராணுவம் அத்துமீறி உள்நுழைந்தது. இதனால் மீண்டும் எல்லைகளில் பதற்றம் நிலவி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தை:

அதில் இந்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இனி எல்லை பிரச்னை நடக்காது என்று சீன அரசு உறுதியளித்தது. ஆனால், அதற்கு மாறாக பாங் கோங் த்சோ என்னும் பனி ஏரியின் தெற்கு பகுதி மற்றும் ஷென்பவோ மலையோரத்தில் நேற்று இரவு இரு நாட்டு வீரர்களுக்கும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு காரணம் இந்தியா ராணுவம் தான் என்று சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஷாங் ஷுலி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ராணுவம் மறுப்பு:

அவர் கூறுகையில் “எல்லையில் சீன ராணுவ வீரர்கள் நுழையவில்லை. பேச்சு வார்த்தை நடத்தப்படும் போது இந்திய வீர்ரகள் துப்பாக்கி சூட்டில் இறங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் சீன வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய ராணுவத்தினரின் செயல் கண்டிக்கத்தக்கது. இது ஒரு மோசமாக மற்றும் ஆத்திரமூட்டும் செயல்.” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி முடிவில் எந்த குழப்பமும் இல்லை!!

இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. அவர்கள் தான் எல்லையில் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தினர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இவர்கள் நம்மை பற்றி தவறாக சித்தரிக்கிறாரகள் என்றும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -