விற்பனைக்கு தயாராகும் ‘ஹோண்டா CB’ – புதிய அம்சங்களுடன் வெளியான விலை பட்டியல்!!

0

ஹோண்டா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான ஹோண்டா CB தற்போது விற்பனைக்கு தயாராகியுள்ளது. தற்போது இதன் விலை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

ஹோண்டா:

இரு சக்கர வாகன நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஹோண்டா நிறுவனம். இந்த நிறுவனம் பல மாடல் வாகனங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. மேலும் அவை அனைத்தும் பயனாளர்கள் விருப்பதிக்கேற்ப இருந்து வந்தது. தற்போது ஹோண்டா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான ஹோண்டா CB 350 RS வாகனம் விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த வாகனம் ராயல் என்பீல்ட், பெனெல்லி இம்பிரியல் மற்றும் ஜாவா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் ஹைனேஸ் CB 350 வாகனம் விற்பனையில் 10,000 ஐ தாண்டிய நிலையில் ஹோண்டா CB 350 RS வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக 5500 RPM ல் 20.8 பிஹெஜ்பி பவர் மற்றும் 3000 RPM ல் 30 என் எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் ஸ்லீப்பர் கிளட்ச் கொண்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனை இணைத்து அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் மியூசிக் நேவிகேஷன் உடன்பட பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது. இவை அனைத்தும் பயனாளர்களை கவரும் என்று கூறுகின்றனர்.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் இந்த வாகனத்தில் எரிபொருள் இருப்பினை காணும் வசதி, கியர் பொசிசன் இண்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலின் முன் பக்க டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின் பக்க டயரில் 240 மிமீ டிஸ்க் உட்பட பல அம்ஸங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஹோண்டா CB 350 RS விற்பனைக்காக ரூ.1.96 லட்சத்திற்கு வெளியிடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here