என்ன மாதிரியே இருக்கா இந்த குடும்பத்துல இவ யாரு?? ஹேமாவை சந்தேகிக்கும் கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா சமைப்பதற்காக யார் வீடு என்றே தெரியாமல் பாரதியின் வீட்டிற்கு வருகிறார். வீட்டை அதிர்ச்சியடையும் கண்ணம்மா திரும்பி செல்ல முயற்சிக்கும் போது ஹேமா வந்து அழைத்து செல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா கண்ணம்மாவை வீட்டிற்கு அழைக்க 8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு வருகிறார். தனது பழைய நினைவுகள் அனைத்தும் வர வீட்டிற்குள் வர மறுக்கும் கண்ணம்மாவை உள்ளே அழைத்து செல்கிறார் ஹேமா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எதார்த்தமாக வரும் சௌந்தர்யா கண்ணம்மாவை பார்க்க அதிர்ச்சியடைகிறார். அதே சமயம் ஹேமாவிற்கு விஷயம் தெரிய கூடாது என்று சௌந்தர்யா அமைதியாக இருக்கிறார். அடுத்ததாக வேணு வர கண்ணம்மாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். எப்படி மா இருக்க என்று கேட்பதற்குள் சௌந்தர்யா அவரை அமைதியாக்க ஹேமாவிற்கு டவுட் வருகிறது.

கண்ணம்மாவை உங்களுக்கு முன்னடியே தெரியுமா?? என்று கேட்கிறார். இருவரும் சுதாரித்து சமாளிக்கின்றனர். அடுத்ததாக அகிலனும் அஞ்சலியும் அங்கே வர கண்ணம்மாவை பார்த்து அதிர்ச்சியாகின்றனர். கண்ணீருடன் வரும் அகிலனை சௌந்தர்யா ஹேமாவை இருப்பதை சுட்டிக்காட்ட அகிலனும் அமைதியாகிறார்.

விற்பனைக்கு தயாராகும் ‘ஹோண்டா CB’ – புதிய அம்சங்களுடன் வெளியான விலை பட்டியல்!!

கண்ணம்மா வந்தது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியாக்கியது. இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தான் ஹேமா சமையல் ஆண்ட்டி என்று சொன்னதா?? என்று சௌந்தர்யா கண்கலங்குகிறார். தாயை பார்த்ததும் தான் ஹேமா இப்படி துடித்திருக்கிறாள் என்று கலங்குகிறார் சௌந்தர்யா.

அடுத்ததாக கண்ணம்மாவின் குழந்தையை பற்றி விசாரிக்கிறார் சௌந்தர்யா. சமையல் வேலை இருப்பதாக சொல்லி கண்ணம்மா உள்ளே செல்கிறார். ஹேமாவும் கண்ணம்மாவுடன் செல்ல ஹேமா இந்த குடும்பத்தில் யார் என்று கண்ணம்மாவிற்கு சந்தேகமாகிறது.

மேலும் என் கலரில் இருக்கிறாளே ஹேமா என்று கண்ணம்மாவிற்கு சந்தேகம் அதிகமாகிறது. அடுத்ததாக வீட்டில் யாரையும் தெரியாததை போலவே காட்டிக்கொள்கிறார் கண்ணம்மா. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here