இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை – சுகாதாரத்துறை தகவல்!!

0

இந்தியாவில் கொரோனாவால் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,55,913 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக உள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை தாண்டியள்ளது. தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறப்பு வீதம் ஆகியவற்றை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,610 என உறுதி செய்யப்பட்டதின் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,37,320 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 100 பேர் பலியாகியுள்ள நிலையில் இறப்பு வீதம் 1,55,913 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,36,549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தொற்றிலிருந்து ஒரே நாளில் 11,833 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,44,858 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 97.33% ஆகவும், உயிரிழந்துள்ளவர்களின் விகிதம் 1.43% ஆகவும் உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் விகிதமும் 1.25% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 89,99,230 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here