இனி முருங்கைக்காய் போதும் உங்க முடியை வளர வைக்க., இந்த டிப்ஸ மட்டும் ட்ரை பண்ணிப்பாருங்க., ரிசல்ட் வேற லெவல்!!

0
இனி முருங்கைக்காய் போதும் உங்க முடியை வளர வைக்க., இந்த டிப்ஸ மட்டும் ட்ரை பண்ணிப்பாருங்க., ரிசல்ட் வேற லெவல்!!
இனி முருங்கைக்காய் போதும் உங்க முடியை வளர வைக்க., இந்த டிப்ஸ மட்டும் ட்ரை பண்ணிப்பாருங்க., ரிசல்ட் வேற லெவல்!!

பொதுவாக முருங்கை கீரையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் உணவில் சேர்த்து கொள்ளும் படி மருத்துவர்கள் நமக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதுபோக முருங்கை காயில் சத்து மற்றும் சுவை ஏராளமாக கொட்டி கிடப்பதால் அதையும் நாம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இந்த முருங்கை காயை வைத்து எப்படி நம் முடி வளர்ச்சியை அதிகரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தேவையான பொருட்கள்;

  • முருங்கைக்காய் – 2
  • கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • பாதாம் ஆயில் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் சீரம் தயாரிப்பதற்கு 2 முருங்கைக்காய் எடுத்து அதில் உள்ள விதை மற்றும் சதை பகுதியை தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளவும். மேலும் அதோடு 1 டீஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.., ஒரு கிலோ தக்காளி இவ்வளவு தானா??

இப்போது இவற்றை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி சக்கையை தனியாக எடுத்து விடவும். மேலும் இதோடு 3 டீஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இப்போது இந்த சீரத்தை நம் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி முடி வரை ஸ்ப்ரே செய்து கொள்ளவும். இந்த டிப்ஸை மாதத்தில் 2 முறை பாலோவ் செய்து வந்தால் நம் முடி அசுர வளர்ச்சியடைவதை நம்மால் உணர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here