மூட்டுவலிக்கு உடனடி தீர்வு – இந்த எண்ணெய்யை மட்டும் பயன்படுத்துங்க!!

0
knee-pain
knee-pain

வயதானவர்கள் அனைவர்க்கும் மூட்டுவலி வருவது சகஜம். ஆனால் அதற்காக கடைகளில் விற்கும் சில மாத்திரை, மருந்துகளை உபயோகிப்பது தீர்வாகாது. இந்த மூட்டுவலியை இயற்கையாகவே கட்டுப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தைலம் தயாரிக்கலாம்.

மூட்டுவலி

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு 50 வயதை தாண்டியதும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. இதனால் நடப்பது கூட சிரமமாகிறது. மாடிப்படிகள் கூட ஏற முடியாமல் போகிறது. உடல் அதிக பருமன் ஆனாலும் இந்த மூட்டுவலி ஏற்படும். இதற்கு வீட்டிலேயே எளிய முறையில் தைலம் தயாரிக்கலாம்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

knee pain
knee pain

வேப்பெண்ணெயை அந்த காலத்தில் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏனெனில் அதில் மருத்துவ குணங்கள் அதிகம். இந்த வேப்பெண்ணெயை கடாயில் ஊற்றி காய்ந்ததும் அதில் கிச்சிலி கிழங்கை பொடி செய்து போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். நன்கு சிவந்ததும் அதனை இறக்கி வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இந்த எண்ணெயை காலை, மாலை என தேய்த்து வர வேண்டும். இது மூட்டு வலிக்கு நல்ல பலனை தரும்.

knee pain oil
knee pain oil

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

இல்லையெனில் சாதம் வடித்த கஞ்சியை மிதமான சூட்டில் முட்டியில் ஊற்றி வந்தால் மூட்டு வலி குறையும். 15 பூண்டுகளை எடுத்து அதனை கடுகு எண்ணெயில் போட்டு சிவக்கும் படி வறுத்து அந்த எண்ணெயை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு வெந்தயத்தை நன்கு ஊறவைத்து மைபோல அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனை கடாயில் ஊற்றி தண்ணீர் சேர்த்து கிளறவும்.

knee pain oil
knee pain oil

இப்பொழுது ஒரு பேஸ்ட் போல வரும். அதனை இறக்கி ஆறவைத்து மிதமான சூட்டில் முட்டியில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். பிறகு காலை ஈரமில்லாமல் துடைத்து நாம் செய்து வைத்திருந்த பூண்டு எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வரவும். இதனால் மூட்டுவலி கட்டுப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here