தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

0
தொப்புளில் எண்ணெய்
தொப்புளில் எண்ணெய்

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. இதனால் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வழிவகை செய்கிறது. உடல் சூடு, முடிகொட்டுதல், கண்ணில் ஏற்படும் பிரச்சனை, உடல் சோர்வு என அனைத்து பிரச்சனைகளும் தொப்புளில் எண்ணெய் வைப்பதால் குறைகிறது.

எண்ணெய் நன்மைகள்

oil
oil

நமது உடலில் முக்கியமான பகுதி என்றால் அது  தொப்புள் தான். தொப்புளில் 72 ஆயிரத்திற்கு மேற்பட்ட நரம்புகள் உள்ளன. தொப்புளில் எண்ணெய் வைப்பதால் அந்த எண்ணெய் வகைகளை பொருத்து அதன் பலன்களை நாம் பெறலாம். இந்த வழிமுறையை இரவில் தூங்க செல்லும் முன் செய்ய வேண்டும்.

எள்ளு எண்ணெய்

எள்ளு எண்ணெய்
எள்ளு எண்ணெய்

எள்ளு எண்ணெயை தொப்புளில் ஒரு சொட்டு ஊற்றி அதன் ஒரு அங்குலம் வரை தடவ வேண்டும். இதனால் பித்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு உடலை சமநிலைப்படுத்தும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய்

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கடுகு எண்ணெயை தொப்புளில் ஒரு சொட்டு விட்டு படுத்தால் உதட்டில் ஏற்படும் வறட்சி நீங்கும். மேலும் கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகும். மூட்டுவலி அதிகம் உள்ளவர்கள் இதனை தினமும் செய்து வரலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இதனை செய்து வந்தால் நடுக்கங்கள் குறையும்.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெயை தொப்புளில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும். சரும வறட்சி, தேமல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

நெய்

நெய்
நெய்

நெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த நெய்யை தொப்புளில் தேய்த்து படுத்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அனைவரின் வீட்டிலும் இருக்கும் பொருளாகும். அது எளிதாக கிடைப்பதாலோ என்னவோ அவற்றின் அருமை நமக்கு தெரிவதில்லை. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையை தொப்புளில் தேய்ப்பதால் ஆண், பெண்ணிற்கு ஏற்படும் மலட்டு தன்மை கூட குணமாகும். மேலும் ஆலிவ் எண்ணெயை தொப்புளில் தடவினால் கருச்சிதைவு பிரச்சனை விரைவில் குணமாகும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை தொப்புளில் தடவி வந்தால் முடிகொட்டுதல் பிரச்சனை சரியாகும். மேலும் உடலில் ஏற்படும் சோர்வு குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here