இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலங்களின் தரவரிசை பட்டியல் இதோ!!

0

2020 ஆம் ஆண்டின் மிகவும் மகிழ்ச்சியான மாநிலங்களின் முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தமிழகம் தவிர பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை இந்தியாவின் மகிழ்ச்சியான முதல் 10 மாநில தரவரிசையில் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மகிழ்ச்சியாக மாநிலங்கள்:

ஆண்டுதோறும் நாடு முழுவதும் மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியல் வேலை, மக்களின் உறவுகள், ஆரோக்கியம், மத, ஆன்மீக நோக்கம் ஆகியவற்றுடன் இம்முறை கொரோனா தாக்கத்தை அடிப்படையாக வைத்தும் தயார் செய்யப்பட்டு உள்ளது. இது 36 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் 16,950 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டு உள்ளது.

மகிழ்ச்சியான மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதல் இடத்திலும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பஞ்சாப் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகியவை உள்ளன. பஞ்சாப், குஜராத் மற்றும் தெலுங்கானா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன. கணக்கெடுப்பின்படி, கொரோனா காரணமாக மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆய்வின் படி, திருமணமாகாதவர்களை விட திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. உறவு முறைகளில் மகிழ்ச்சி தொடர்பான ஆய்வில் பஞ்சாப், கர்நாடகா, மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் சிக்கிம் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. சுகாதாரம் தொடர்பான ஆய்வில் லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பஞ்சாப், மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களை பெற்றுள்ளன.

இந்தியாவின் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் – தமிழகத்தில் முதல்வர் துவக்கி வைப்பு!!

மத அல்லது / மற்றும் ஆன்மீக விஷயத்தில், சிக்கிம், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், திரிபுரா மற்றும் லடாக் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. எதிர்கால மகிழ்ச்சி தரவரிசை அறிக்கையில், மணிப்பூர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் குஜராத் ஆகியவை முதல் மாநிலங்கள் முதல் இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here