இணையத்தை கலக்கும் ‘வீரன் திருவிழா’….,வைப் இல் ரசிகர்கள்….,

0
இணையத்தை கலக்கும் 'வீரன் திருவிழா'....,வைப் இல் ரசிகர்கள்....,
இணையத்தை கலக்கும் 'வீரன் திருவிழா'....,வைப் இல் ரசிகர்கள்....,

இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வீரன்’. இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து ஆதிரா ராஜ், முனீஸ்காந்த், வினய், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘வீரன்’ திரைப்படத்தில் ஆதி சூப்பர் மேன் கதாப்பாத்திரமாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கான ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘வீரன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது.

மல்யுத்த வீரர்களுக்கு நடிகை ரித்திகா சிங் ஆதரவு….,வலுக்கும் போராட்டம்…..,

அந்த வகையில், வீரன் படத்தில் இடம்பெற்றுள்ள அறிமுகப் பாடல் மற்றும் பப்பர மிட்டாய் என்ற 2 பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது. அதே போல, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 3 ஆவது பாடலான ‘வீரன் திருவிழா’ பாடலை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலும் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here