முடி உதிர்வா?? இனி கவலை வேண்டாம்!! சூப்பரான ஹேர் மாஸ்க் டிப்ஸ்!!

0
hairfall

பெண்களுக்கு இப்போ இருக்குற பெரும் கவலையே முடி உதிர்வது தாங்க. ஐயோ இவ்வளவு முடி கொட்டுதே நம்ம நிலைமை என்ன ஆகப்போகுதோனு?? ரொம்பவே பயப்படுறோம். முன்னாடியெல்லாம் நம்ம தாத்தா, பாட்டி இயற்கையா கிடைக்குற இலை, செக்கில் ஆட்டிய எண்ணையை தான் பயன்படுத்துனாங்க. ஆனா இப்போ நாம விளம்பரம் மற்றும் மெடிக்கல கிடைக்குற புதுப்புது எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துறோம். இதனால நாம முடி வளர்ச்சி வயது ஆக ஆக கொறஞ்சுகிட்டே போது. வாங்க இப்போ நம்ம வீடுகளிலேயே எளிமையா கிடைக்க கூடிய பொருள்களை வச்சு நீளமா, அடர்த்தியா முடி வளர்ப்பது எப்படினு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கருவேப்பிலை – கைப்பிடி அளவு
  • வெள்ளை கரிசலாங்கண்ணி – கைப்பிடி அளவு
  • வேப்பிலை – கைப்பிடி அளவு
  • செம்பருத்தி இலை – கைப்பிடி அளவு
  • வெங்காயம் – சிறியது 4
  • நெல்லிக்காய் – 4
  • செம்பருத்தி பூ- 4
  • கற்றாழை – 50 கி
  • செக்கு தேங்காய் எண்ணெய் -50 மிலி

பயன்படுத்தும் முறை:

முதல்ல உங்கள் தலை முடியை தூசு எதுவும் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொண்டு சுத்தமான தேங்காய் எண்ணையை முடி வேர்க்கால்களில் படும்படி தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் மேலேயுள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்சி ஜாரில் போற்று தண்ணீர் ஊற்றாமல் (குறிப்பு: ஏனென்றால் கற்றாழை மற்றும் நெல்லிக்காயில் உள்ள நீரே போதுமானது) பேஸ்ட் பதம் வரும் வரை அரைத்து கொள்ளவும். இப்பொழுது முடியை தனித்தனி பாகங்களாக பிரித்துக்கொண்டு நன்றாக அரைத்த விழுதை தேய்க்கவும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தேய்த்த பின் ஒரு பாலீத்தின் பையை கொண்டு முடியை கட்டிவிட வேண்டும். 30- 45 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பின் அலச வேண்டும். அலசிய பின் உங்களுக்கே தெரியும் உங்கள் முடி பட்டு போல் மின்னும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை வாரம் இரண்டு முறை செய்தாலே போதும் நடக்கும் அதிசயத்தை நீங்களே கண்கூடாக உணரலாம். கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை பயன்படுத்தாமல் எப்பொழுதும் தலைக்கு செக்கில் அரைத்த எண்ணையை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here